பிரதான செய்திகள்

திருக்கோவில் வைத்தியசாலைக்கு பெறுமதிமிக்க மருத்துவ உபகரணங்கள்


(ஆதிப் அஹமட்)

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் சனிக்கிழமை (04) இடம்பெற்றது.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத், பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர் உட்பட வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் கலந்துகொண்டனர். 

புதிதாக குருதி சுத்திகரிப்பு (dialysis unit) பிரிவினை நிறுவுதல்.

வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து மேலதிகமாகவும் வைத்தியர்களை நியமித்தல்.

இயன் மருத்துவப் பிரிவிற்கு தேவையான உபகரணங்களை வழங்கி அதனை திறன்பட இயங்கச் செய்தல்.

வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியர் விடுதியினை திறத்தல்.

சத்திர சிகிச்சைக்கூடத்தினை அவசரமாக திறத்தல்.

வைத்தியசாலைக்குரிய Master Plan திட்ட வரைபினை தயாரித்தல் என பணிப்பாளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மேற்குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், சகல வசதிகளையும் கொண்ட கட்டிடமொன்றினை எதிர்காலத்தில் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிராந்திய பணிப்பாளர் வைத்தியசாலைக்குத் தேவையான ஒரு தொகுதி பெறுமதிமிக்க மருத்துவ உபகரணங்களையும்  இந்நிகழ்வின்போது 
கையளித்தார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்று மிகக் குறுகிய காலத்துக்குள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு மேற்குறித்த பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ள பிராந்திய பணிப்பாளருக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் இக்கூட்டத்தின் போது நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.










 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment