பிரதான செய்திகள்

செக்டோ நிறுவனத்தினால் முஅத்தீன்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு


 செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனம் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தீன்களுக்கு  உலர் உணவு பொதிகளை வழங்கியுள்ளது

 

குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (13) அட்டாளைச்சேனை MPCS கட்டிடத்தில் இடம்பெற்றது.

 

செக்டோஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி .எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மேல்நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம் ஹனீபா கௌரவ அதிதியாகவும், சமூக சேவை உத்தியோகத்தர் .ஜி.அஷ்ரத், ஜெஸ்கா அமைப்பின் திட்ட முகாமையாளர் மௌலவி அர்ஷத் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

 

இந்நிகழ்வில் நிறுவனத்தின் உப தலைவர் எம்..றம்ஸான், தவிசாளர் .எல்.றியாஸ், கொள்கைபரப்புச் செயலாளர் .ஆர்.எம்.றிம்சான், பொருளாளர் .எல்.றிம்சான், கணக்காளர் எம்.நிசார், உயர்பீட உறுப்பினர்களான .எல்.எம்.புஹாரிஎஸ்.ஜாபிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

குறித்த உலர் உணவு வழங்கும் நிகழ்வு செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளருமான தேசகீர்த்தி .எம்சம்சுதீன் அவர்களின் பூரண அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

ரமழான் மாதத்தினை முன்னிட்டு , செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனம் முன்னெடுத்து வரும் உலர் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வு எதிர்வரும் ஒரு சில தினங்களில் இடம்பெறவுள்ளது.

 

(றியாஸ் ஆதம்)
















 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment