விளையாட்டுக் கழகங்கள் அதன் செயற்பாடுகளை விளையாட்டுக்களுடன் மட்டுப்படுத்திக்கொள்ளாது, சமூகப்பணிகளிலும் ஈடுபட வேண்டும். அந்த வகையில் அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் கடந்தகால செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாக சபைத் தெரிவும் நேற்று (28) கழகத்தின் தலைவர் எஸ்.இத்ரீஸ் தலைமையில் நஜா விளையாட்டுக் கழகத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்.
அல்-நஜா விளையாட்டுக்கழகம் விளையாட்டுக்களுடன் மாத்திரம் அதன் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாது, இந்தப் பிரதேச மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இக்கழகத்தின் செயற்பாடுகள் இப்பிரதேச மக்களினால் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதுடன், ஏனைய கழகங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசம் முடக்கப்பட்டிருந்த போது அல்-நஜா விளையாட்டுக்கழகமானது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களை அடையாளங்கன்டு, அவர்களுக்குத் தேவையான உலருணவுப் பொருட்களை பல கட்டங்களாக வழங்கியது. அதுமாத்திரமல்ல அக்காலப்பகுதியில் பாரிய இரத்ததான நிகழ்வொன்றினையும் செய்திருந்தது. தற்போது ஜனாஸா வீடுகளுக்கு குளிப்பாட்டும் தட்டு, கதிரைகள், தகரக்கூடாரங்கள் என்பவற்றை இலவசமாக வழங்கும் சேவையினை இக்கழகம் ஆரம்பித்துள்ளது.
இப்பிரதேசத்தினுடைய கல்வி, கலாச்சார விடயங்களிலும் கவனம் செலுத்திவரும் இக்கழகமானது திறமையான மாணவர்களை பாராட்டுதல், பாடசாலை மற்றும் பள்ளிவாசல்கள் பொது சிரமதானங்கள் என சமகால தேவைகளை அறிந்து உரிய நேரத்தில் சில செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது இது பாராட்டத்தக்க விடயமாகும். இக்கழகத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு கழகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்களே பிரதான காரணமாகும்.
சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்டுள்ள இக்கழகமாது பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கூட சகல போட்டிகளிலும் பங்குபற்றி வருகிறது. எதிர்காலத்தில் அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்குவதன் மூலம் விளையாட்டுத்துறையிலும் இக்கழகம் பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே கடின உழைப்பும் முறையான பயிற்சிகளுமே வெற்றியினைத்தரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் போது (2021/2022) ஆண்டுக்கான புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெற்றது.
தலைவர் - எஸ். இத்ரீஸ்
செயலாளர் - ஏ.ஆர்.றஹீம் (ஹசன்)
பொருளாளர் - ஏ.ஆர்.றிம்சான்
உபதலைவர் - எஸ்.எல்.முஸம்மில்
உபசெயலாளர் - எச்.எம்.இஸ்ஸடீன்
முகாமையாளர் - ஏ.எல்.றிம்சான்
நிருவாக உறுப்பினர்கள் -
ரீ.எல்.ஐனுடீன்
ஐ.எல்.றமீஸ்
எம்.பி.கியாஸ்
எச்.ஹாபில்
ஏ.ரி.றியாஸ்
விளையாட்டு அணிகளுக்கான தலைவர்கள்
கிரிக்கெட் - ஏ.எச்.எம்.றிஸ்கான்
எல்லே - ஏ.அஸீம்
கரப்பந்து - எச்.ஏ.பர்சாத்
உதைப்பந்து - வை.நிதாஸ்
கபடி - ரீ.எல்.பயாஸ்
மெய்வல்லுநர் - ஏ.எம்.றிஸ்வான்
கணக்காய்வாளர்
ஏ.சீ.நூறுல்லாஹ்
ஆலோசகர்கள்
டொக்டர் எஸ்.எம்.முனாஸ்டீன் (MBBS)
ஏ.எல்.நியாஸ் BA (LLB)
எஸ்.எல்.முனாஸ் (Ex.Mps) ஊடகவியலாளர்
எம்.ஐ.ஹாபில் Tr
ஏ.எல்.றியாஸ் (ஊடகவியலாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் மற்றும் கிராம உத்தியோகத்தர் எம்.ஐ. அஸ்வர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான எஸ்.எல்.முனாஸ், நஜா விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும், ஊடகவியலாளருமான ஏ.எல்.றியாஸ் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேற்படி கழகத்தின் பொதுக்கூட்டமானது சுகாதார வழிமுறைகளைப் பேணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment