அட்டாளைச்சேனை ரி.பி.ஜாயா வித்தியாலயத்தில் தரம் 05 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் (20) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
"சிட்டுக்களின் சிறகசைவு 2023" எனும் தொனிப்பொருளில் பாடசாலை அதிபர் ஓ.எல்.எம்.றிஸ்வான் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவின் போதே குறித்த ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.அம்ஜத்கான், ஏ.எம்.நெளபர்டீன் ஆகியோர் பிரதம அதிதியாகவும், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி கௌரவ அதிதியாகவும், ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எல்.மன்சூர், எம்.எல்.ஜாபிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
2021 மற்றும் 2022ஆண்டு புலைமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், பாடசாலையில் இடம்பெற்ற தவணைப் பரீட்சைகளில் 1ஆம்,2ஆம்,3ஆம் இடங்களைப் பெற்றவர்கள், பாடசாலையில் பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் என பலர் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்ட குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment