நுகேகொடை நீதவான் மொஹமட் மிஹாயில், அவருக்கு பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவித்துள்ள நீதவான், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பேசியதாக வழங்கப்பட்ட தொலைபேசி உரையாடல் பதிவுகள் அவரது குரல் மாதிரிகளுடன் ஒத்துப் போவதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர், நுகேகொடை நீதவான் முன்னிலையில் இதன்போது திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிபதிகளின் கடமைகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஜனவரி 14ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

0 comments:
Post a Comment