பிரதான செய்திகள்

சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சமூக சேவை அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச சபையுடன் சம்மாந்துறை சமூக சேவை அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த  'பாதுகாப்பான தேசம் செழிப்பான நாடு' எனும் தொனிப்பொருளில்; 72வது சுதந்திர தின நிகழ்வு அப்துல் மஜீட் மண்டபத்திற்கு முன்பாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டதுடன் பயன்தரு மரக்கன்றுகளும்; நடப்பட்டது. இதேவேளை வீதியில் பயணித்த வாகனங்களுக்கு தேசியகொடி வழங்கப்பட்டதுடன், பழமரக்கன்றுகளும் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சுதந்திர தினத்தினை பிரதிபலிக்கும் வகையில் வீதி நாடகமும் இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சமாந்துறை சமூக சேவை அமைப்புக்களின் தலைவர் ஏ.ஜெ.காமித் இம்டாட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், சமூகசேவை அமைப்புகளின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment