பிரதான செய்திகள்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

(ஏ.எல்.றியாஸ்)

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவம் இன்று (4) சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை நாட்டின் பல பாகங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றது. அவ்வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எம்.எம்.சமீம் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், பிரதம தாதிய மேற்பார்வை அதிகாரி எஸ். ஜலால்டீன், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

விசேடமாக இன்றைய தினம் வட,கிழக்கு மாகாணங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் சுதந்திர தினத்தினை கொண்டாடி மகிழ்ந்தனர். அத்துடன் சுதந்திர தினத்தினையொட்டி விளைாயட்டுப் போட்டிகள், ஊர்வலங்கள், இரத்ததான முகாம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அரச நிறுவனங்கள், மதஸ்தலங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள், கழகங்கள் என பல்வேறு தரப்பினராலும் இம்முறை சுதந்திர தின வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, கொண்டாடப்பட்டது.








 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment