பிரதான செய்திகள்

தௌவா இஸ்லாமிய கலா பீடத்தின் 10வது பட்டமளிப்பு விழா

(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்)

சாய்ந்தமருது தௌவா இஸ்லாமிய கலா பீடத்தின் 10வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (02) சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கலாபீடத் தலைவர் அஷ்ஷெய்க் யூ.எல்.எம்.காஸிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.அஷ்ரப் முதன்மை சொற்பொழிவாளராகவும் மேர்ஸி கல்வி வளாக பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பௌசுர் ரஹ்மான், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.முனாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் சட்டத்தரணி எம்.என்.எம்.முஜீப், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா தலைவர் எம்.எஸ்.எம்.சலீம், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.ஜப்பார், ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத், ஹதியத்துல்லாஹ், எம்.ஆதம், எம்.எம்.சலீம் உட்பட கலாபீட நிர்வாகிகள், உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் பிரமுகர்களும் கலாபீட மாணவர்களும் பெற்றோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது எஸ்.எச்.அஜ்வத் அஹமட் (சம்மாந்துறை), எம்.எம்.எம்.ஆரிப் (சம்மாந்துறை), என்.எம்.தாரிக் (அட்டாளைச்சேனை), ரி.எம்.ஆஷிக் (ஒலுவில்), எம்.எம்.முஜாஹித் (கதுருவளை), ஏ.எம்.முபாரிஸ் (சம்மாந்துறை), ஐ.ஏ.அலி அப்ரான் (நிந்தவூர்), எம்.எம்.மிப்தாம் (நிந்தவூர்), எஸ்.ஏ.எம்.நுஸ்கி (சாய்ந்தமருது), ஏ.ஏ.எம்.முபஸ்ஸிர் (நிந்தவூர்), எம்.எம்.ஹிஜாஸ் (அட்டாளைச்சேனை), எம்.எப்.அப்ரி அஹமட் (நிந்தவூர்), ஏ.எம்.அஸ்பாக் (சம்மாந்துறை), கே.எம்.எம்.அஜ்மல் (சம்மாந்துறை), எம்.என்.ஜிஹாத் (நிந்தவூர்) ஆகிய 15 மாணவர்களும் அல்ஹாபிழ் பட்டம் வழங்கி, முடிசூடப்பட்டனர். 

இவ்விழாவில் சிறப்பு மலர் ஒன்று ம் வெளியிடப்பட்டது. அத்துடன் கலாபீட தலைவர் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை பாராட்டி கலாபீட சமூகத்தின் சார்பில் பிரதம அதிதியினால் அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.





 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment