மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு ஆண்கள் தலைமுடி ஒழுங்கான முறையில் வெட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பதுடன் தாடி வைத்திருத்தல் தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் நியமனம் பெறும் பெண்கள் இள நிறத்திலான சேலை அணிந்து இருத்தல் வேண்டும் எனவும்,பாரம்பரிய முறைப்படி கொண்டை போட்டு வருதல் வேண்டும் எனவும் வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து குறித்த முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அந்த அமைச்சுக்கு முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்கள் தமது கலாச்சார ஆடையில் வருவதற்கான அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும் குறித்த நிகழ்வில் முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்கள் தமது கலாசார ஆடையில் செல்லலாம் என்பதுடன் தமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு தமது நன்றியையும் தெரிவிப்பதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment