ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பாடசாலை அதிபர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.முகைடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஹாரூன் மௌலவி, ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் சாஜித் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







0 comments:
Post a Comment