பிரதான செய்திகள்

தலவாக்கலை சுமன மத்திய கல்லூரி முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த கல்லூரியில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (10)  காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியின் முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு பெற்றோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுலோகங்களில் எங்கள் பாடசாலையில் ஆசிரியர்கள், அதிபர் இல்லை. உயர்தர வகுப்பிற்கான ஆசிரியர்கள் இல்லை. உடனடியாக ஆசிரியர்களை நியமியுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

இது தொடர்பாக பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பாடசாலையில் பிள்ளைகள் படிப்பிதற்கு ஆசிரியர்கள் இல்லை. நீண்ட காலமாக அதிபரும், ஆசிரியர்களும் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கின்ற பொதுவான கல்வி எங்களுடைய பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

பல தடவைகள் நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது பாடசாலையில் குறைபாடு நிலவுகின்ற பாடத்திற்கான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment