கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றிருந்தது. வட்டாரத்தினூடாக ஒரு ஆசனமும், மேலதிக பட்டியலினூடாக இரு ஆசனங்களும் அக்கட்சிக்கு கிடைத்தது. கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் மக்காமடி வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஏறாவூர் நகர சபை ஆட்சியமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தவிசாளர் பதவியினை வழங்குவதற்கும் தீர்மனம் எட்டப்பட்டிருந்தது. அதற்கினங்க முன்னாள் அமைச்சர் சுபையிரின் பெயரை தவிசாளர் பதவிக்கு பரிந்துரைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பட்டியல் ஊடாக தெரிவான இரு உறுப்பினருக்கும் கட்டளையிட்டது.
அற்பசொற்ப லாபங்களுக்காக இரு உறுப்பினர்களும் கட்சியின் கட்டளைக்கு மாற்றமாக செயற்பட்டு முன்னாள் முதலமைச்சர் சார்பான அணியினருடன் இணைந்து ஆட்சியமைத்தனர். அதற்கினங்க ரெபுபாசம் பிரதி தவிசாளரானார். இதனால் சுதந்திரக்கட்சிக்கு கிடைக்கவிருந்த தவிசாளர் பதவி இறுதியில் கைநழுவிப்போனது.
குறித்த சம்பவத்தினால் ஏமாற்றமடைந்த ஏறாவூர் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாலர்கள் உட்பட மத்திய குழுவினர் அற்பசொற்ப லாபங்காக சோரம்போன இரு உறுப்பினர்களையும் கட்சியினை விட்டு வெளியேற்ற வேண்டும் என தீர்மானங்களை மேற்கொண்டனர். இந்த விடயம் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் ஊடாக ஜனாதிபதி மற்றும் கட்சியின் உயர்பீடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக ஏறாவூர் பிரதேச அமைப்பாளராக இருந்த ரெபுபாசத்தினுடைய அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கும், வாக்களித்த மக்களுக்கும் ஏமாற்றமளிக்கும் வகையில் செயற்பட்டவர்களுக்கு உரிய நடவக்கையினை மேற்கொண்டு அவர்களை பதவியிலிருந்து நீக்கியமைக்காக ஜனாதிபதி மற்றும் சுதந்திரக்கட்சி உயர்பீடத்தினருக்கும் அக்கட்சியின் ஏறாவூர் பிரதேச ஆதரவாலர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.



0 comments:
Post a Comment