பிரதான செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டார் தீப்தி போகொல்லாகம

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான பதவிசிறிபுர கிராம மக்கள் தங்களின் கிராமத்தின் குடிநீர் மற்றும் போக்குவரத்து பிரச்சினை உட்பட சிறுநீரக நோயாளர்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரிக்கையினை விடுத்திருந்தனர்.

இதனடிப்படையில்  பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட வேண்டுமென்ற நோக்குடன் கொழும்பிலுள்ள சக தனவந்தர்களுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரின் பாரியார் தீப்தி போகொல்லாகம அங்குள்ள விகாரையை பார்வையிட்டார்.

விகாரையை புணரமைப்பு செய்வதற்காக உதவிகளை வழங்குமாறு விகாரை நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கையினையடுத்து தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாவினை வழங்கி வைத்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் பதவிசிறிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு  தீர்வினை வழங்குவதாகவும் விகாரையை புணரமைப்பதற்கு மேலும் நிதியுதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இதில் பதவிசிறிபுர பிரதேச சபை தலைவரும் பங்கேற்றதுடன் பிரதேசத்தின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment