இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்றத்துக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து சபாநாயகர் பார்வையாளர் களரியில் அமர்ந்து சபை நிகழ்வுகளை பார்வையிட்டதோடு, வந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினார்.
அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர், இப்ராஹிம் மக்கி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீத் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment