பிரதான செய்திகள்

உறுகாமம், வடிச்சல் ஆகிய கிராமங்களின் அபிவிருத்திக்கு 10மில்லியன் நிதி ஒதுக்கீடு: முன்னாள் அமைச்சர் சுபையிருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

- ஏ.எல்.றியாஸ் -

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சமமான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் மற்றும் வடிச்சல் ஆகிய கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதியற்று காணப்படும் மேற்படி இரு கிராங்களின் அபிவிருத்திக்கும் என ரூபா 10மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிரின் வேண்டுகோளுக்கினங்க கிழக்கு மாகாண ஆளுநரினால் குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிதியின் ஊடாக வடிச்சல் மற்றும் உறுகாமம் கிராமங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னாள் அமைச்சர் சுபையிர் மேற்கொண்டு வருகிறார்.

அதற்கினங்க, வடிச்சல் மற்றும் உறுகாமம் ஆகிய கிராம மக்களின் தேவைகளைக் கேட்டறிந்துகொள்ளும் வகையில் அப்பகுதியில் பல்வேறு கூட்டங்கள் இடம்பெற்றுவருகிறது.

குறித்த கூட்டங்களில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாசளர் நாகமணி கதிரவேல், திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உறுகாமம் மற்றும் வடிச்சல் பிரதேச மக்களின் பிரச்சினைகளை இணங்கன்டு அவற்றினை தீர்த்து வைப்பதற்கு நடிவடிக்கைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிருக்கு அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment