(அப்துல் ஹமீட்)
அட்டாளைச்சேனை அறபாவின் சுவடுகள் 2018 க.பொ.த உயர் தரத்திற்கு உயர்ந்தோரையும் உயர்த்தியோரையும் பாராட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இன்று (26) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகவும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை நட்சத்திர அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ரகுமத்துல்லா மற்றும் மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான, ஏ.ஜீ.பஸ்மீல், ஏ.எம்.நௌபர்தீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான தமீம் ஆப்தீன், ஜெமீலா ஹமீட் ஆகியோர் அதிதிகளாகவும், ஓய்வுபெற்ற வெளிநாட்டு தூதரக உத்தியோகத்தர் எம்.சிராஜ் அகமட் மற்றும் முன்னாள் தவிசாளர் ஏ.பீ.எம்.ஏ.காதர் ஆகியோர் அரபாவின் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது நாட்டார் பாடல் பாடிய மாணவ மாணவிகளுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜெமிலா ஹமீட் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகை பணப்பரிசில்களை வழங்கி அம்மாணவர்களை பாராட்டி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களையும், இதற்குக் காரணமாக அமைந்த ஆசிரியர்களையும் பாராட்டி பரிசில்களையும், ஞாபகச் சின்னங்களை அதிதிகளினால் வழங்கி
வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment