பிரதான செய்திகள்

ஊடகவியலாளர் யூ.கே. காலிதீன் மீது தாக்குதல்

(எஸ்.அஷ்ரப்கான்)

 ஒரு நாட்டில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயலாகுமென அம்பாறை மாவட்ட ஊடகவியலானர் போரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் கடந்த வியாழக்கிழமை (31) சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலிதீன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் கண்டித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் சில தனிப்பட்ட நபர்களால் ஆங்காங்கே ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவமானது ஊடகத் துறையினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலிதீன் ஒரு நேர்மையான பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுபவர் இவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவமானது கண்டிக்கத்தக்கதாகும்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment