பிரதான செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் வெசாக் அன்னதான நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பௌத்த மதத்தவர்களின் வெசாக் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் என்பவற்றின் ஏற்பாட்டில் வெசாக் அன்னதான நிகழ்வு கடந்த 29,30ஆம் திகதிகளில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற மேற்படி அன்னதான நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏனைய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற வெசாக் அன்னதான நிகழ்வில் மட்டக்களப்பு -கல்முனை மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியால் சென்ற துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, கார், வேன், பஸ் உட்பட ஏனைய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு அதில் பிரயாணம் மேற்கொண்ட வாகன உரிமையாளர்கள், சாரதிகள், பொது மக்கள் ஆகியோருக்கு கடலை மற்றும் குளிர்பானம் என்பன அன்னதானமாக வழங்கப்பட்டது.

காத்தான்குடி பொலிஸ் நிலையயத்தின் புதிய பொறுப்பதிகாரியாக அண்மையில் கடைமையேற்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையில் முதற்தடவையாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வெசாக் அன்னதான நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment