அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹிரின் ஆலோசனையின் பேரில் ஆற்றும் கரங்கள் அமைப்பின் தலைவரும், சத்திர சிகிச்சை நிபுணருமானடாக்டர் பீ.கே. இரவீன்திரன் தலைமையில் இக்கிரிக்கட் போட்டி இடம்பெற்றது.
அணிக்கு 11 பேர் கொண்ட, 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இக்கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சத்திர சிகிச்சைப் பிரிவு அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்களை இழந்து 78ஓட்டங்களை பெற்றனர்.
79 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மருத்துவப் பிரிவு அணியினர் 9.2 ஓவர்கள் முடிவில் 3விக்கட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களை பெற்று 7 விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

0 comments:
Post a Comment