திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்டிய பத்து பேரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் முஹம்மட் நயீம் நேற்று (30) உத்தரவிட்டார்.
கொழும்பு, அனுராதபுரம்,குருணாகல் வவுனியா,மற்றும் வெருகல் பகுதியைச் சேர்ந்த 36,38,22,26,40,மற்றும் 54 வயதுடைய பத்து பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் வெருகல் சூரநகர் பகுதியிலுள்ள கோவில் ஒன்றில் நான்கடி வரை புதையல் தோன்றிய வேளையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய கோடாரி, மண்வெட்டி, பிக்காஸ் மற்றும் அலவாங்கு போன்றனவும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment