அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் அட்டாளைச்சேனை ஸர்க்கி இளைஞர் கழக அணியினர் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவாகினர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் கிரிக்கட் சுற்றுப்போட்டி (15) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அணிக்கு 7பேர் கொண்ட 5ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை 14ஆம் பிரிவு ஸர்க்கி இளைஞர் கழக அணி மற்றும் அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு அஸ்ரப் இளைஞர் கழக அணிகள் மோதியது.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய ஸர்க்கி இளைஞர் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5ஓவர்கள் முடிவில் 3விக்கட்டுக்களை இழந்து 87ஓட்டங்களைப் பெற்றனர். இதில் அந்த அணி சார்பாக முபாரிஸ் 52ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
88ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஸ்ரப் இளைஞர் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5ஓவர்கள் முடிவில் 4விக்கட்டுக்களை இழந்து 73ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டனர்.
இதனடிப்படையில் 15மேலதிக ஓட்ங்களினால் இந்தப்போட்டியில் ஸர்க்கி இளைஞர் கழக அணியினர் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவாகினர்.

0 comments:
Post a Comment