கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.எம்.ஜுனைடீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான எம்.சீ.எம்.ஷரீப் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தின் போது கூட்டுறவு சங்கங்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதன்போது கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவுக்குட்பட்ட கூட்டுறவு சமாசங்களின் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று (5) மாலை வரையறுக்கப்பட்ட சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்டுறவு கிராமிய வங்கி திறப்பு விழாவும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான எம்.சீ.எம்.ஷரீப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


0 comments:
Post a Comment