பிரதான செய்திகள்

மருதமுனை சிறுவர் பூங்கா அழகுபடுத்தும் திட்டம்; முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சுனாமி அனர்த்தத்தினால் அழிவடைந்த மருதமுனை மஷூர் மௌலானா வீட்டுத் திட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை அழகுபடுத்தும் பொருட்டு முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இன்று (17) சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாநகர சபையின் பெக்கோ இயந்திரம் மற்றும் வாகனங்களுடன் ஊழியர்கள் பலர் இப்பூங்கா பகுதியிலுள்ள கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

முழுநாள் இடம்பெற்ற இச்சிரமதான நடவடிக்கைகளை சுமார் மூன்று மணித்தியாலங்கள் களத்தில் நின்று நெறிப்படுத்திய முதல்வர், இப்பூங்காவுக்கு எல்லையிடுதல், உள்ளக வீதிகள் அமைத்தல், அழகுபடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 83 இலட்சம் ரூபா நிதியில் இச்சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment