அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை அமைப்பாளரும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான மக்கள் தொண்டன் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் தொழிலதிபர் எஸ்.கே.கிதுறு முகம்மட் தலைமையில் நேற்று (18) மதியம் அட்டாளைச்சேனை மீலாத்நகர் அல்-ஜெஸீறா வித்தியாலய அருகாமையில் உள்ள நுாஹு தென்னம் தோப்பு வளாகத்தில் நடைபெற்ற அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் மேற்கண்டவாறு இங்கு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
இவ்வட்டாரத்தின் தேவைப்பாடுகளை நான் நன்றாக தெரிந்தவன் என்ற வகையில் எனது 7 வருட அரசியல் காலத்தில் தவிசாளராக இருந்த போதும் மாகாண சபை உறுப்பினராக இருந்த போதும் பின்னர் மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போதும் பல வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் தந்துள்ளளேன். இதேபோல் எமது தலைவரினதும் மற்றும் எமது கட்சியின் ஏனைய பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாகவும் பல உதவிகள் இவ்வட்டாரத்திற்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வட்டாரத்தின் பிரதேச சபையின் உறுப்பினர் தொழிலதிபர் எஸ்.கே.கிதுறு முகம்மட் ஊடாக மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித்திட்டங்களை இவ்வட்டாரத்தில் உள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒழுங்குபடுத்தி என்னிடம் வழங்குவதன் ஊடாக முன்னுரிமை அடிப்படையில் நான் இவ்வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளேன். அத்துடன் பிரதேச சபையின் ஊடாக செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களை எமது புதிய தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா ஊடாக உங்களது பிரதேச சபையின் உறுப்பினர் மேற்கொள்ளலாம்.
இதன்போது புறத்தோட்ட வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக அயராது உழைத்த கட்சியின் போராளிகளுக்கு வெற்றிநாயகன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் தொழிலதிபர் எஸ்.கே.கிதுறு முகம்மட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா(நபீல்) பிரதேச சபை உறுப்பினர்களான சமூகநேயன் தமீம்ஆப்தீன், ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எம்.எம்.ஹனீபா பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் செயலாளரும் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான கல்விமான் யூ.எம்.வாஹிட் கோணாவத்தை ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம்.அமீன் உள்ளிட்ட கட்சியின் புறத்தோட்ட வட்டாரத்தின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment