உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று (2) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முன்னிலையிலே புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு ஏறாவூர் நகர சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீ.ல.சு.கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிரின் அழைப்பின் பேரிலே புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை, வாழைச்சேனை பிரதேச சபை போன்றவற்றிக்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே இதன்போது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வில், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் தலைவர் மௌலவி எம்.ஏ.அப்துல் வாஜித், ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி நிராஸ், ஸ்ரீ.ல.சு.கட்சி ஏறாவூர் மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







0 comments:
Post a Comment