பிரதான செய்திகள்

கல்முனை மாநகர முதல்வராக சட்டத்தரணி றகீப் தெரிவு

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று (02) திங்கட்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை மேயர், பிரதிமேயர் தெரிவு என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தெரிவு இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபைக்கு இம்முறை 09 கட்சிகளும் 06 சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன. இருந்தும் 02 சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 04 சுயேச்சைகளும் போட்டியிட்டன.

இதில் ஜக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும், சுயேச்சைக்குழு - 4 (சாய்ந்தமருது பிரதேசத்தில்) 09 ஆசனங்களையும், தமிழரசுக்கட்சி (த.தே.கூ) 07 ஆசனங்களையும், அ.இ.ம.கா. 05 ஆசனங்களையும்,  தமிழர் விடுதலைக் கூட்டணி 03 ஆசனங்களையும், தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஒரு ஆசனத்தையும், ஸ்ரீ.சு.கட்சி ஒரு ஆசனத்தையும், சுயேச்சைக்குழு - 2 ஒரு ஆசனத்தையும், சுயேச்சைக்குழு - 3 ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

அந்த வகையில் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்து தற்போது தொங்கு உறுப்பினர்கள் உள்ளிட்ட 41 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இன்றைய தினம் சபை அமர்வில் 31 உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்திதிருந்தனர். சுயேச்சைக்குழு - 4 சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 9உறுப்பினர்களும், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

கல்முனை மாநகர சபையில் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட 31 ஆசனங்களுக்கிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேயர் பதவிக்கு சட்டத்தரணி ஏ.எம். றகீப் மற்றும் த.தே.கூட்டமைப்பு சார்பில் குலசேகரம் மகேந்திரனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. 

இருவருக்குமான தெரிவு திறந்தவெளி வாக்கெடுப்பில் விடப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தெரிவான ஏ. எம். றகீப் 27 வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகரசபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார். அவருடன் போட்டியிட்ட குலசேகரம் மகேந்திரன் 7 வாக்குகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதி மேயர் பதவிக்கு 3பேரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. அந்த வகையில் அ.இ. மக்கள் காங்கிரஸின் முபீத், த.தே.கூட்டமைப்பின் கே.சிவலிங்கம், தமிழர் விடுதலைக்கூட்டணியின் காத்தமுத்து கணேஸ் ஆகிய மூன்று கட்சிகளிலும் இருந்து உறுப்பினர்கள் பிரேரிக்கப்பட்டனர்.

வாக்கெடுப்பில் கணேஸ் 15 வாக்குகளையும் சிவலிங்கம், முபீத் ஆகியோர் தலா 7 வாக்குகளையும் பெற்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment