ஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வு இன்று (5) காலை 11.30மணிக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றது.
17 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வில் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது தவிசாளர் பதவிக்காக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எஸ்.எம்.நளீம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஐ.ஏ.வாசித் அலி ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனால் இருவரில் ஒருவரை தவிசாளராக தெரிவு செய்யும் பொருட்டு தெரிவுக்காக திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வாசித் அலிக்கு ஆதரவாக 9வாக்குகளும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நளிமுக்கு 7வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் 2மேலதிக வாக்கினால் வாசித் அலி தவிசாளராக தெரிவானார்.
பிரதி தவிசாளர் தெரிவில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எஸ்.எம்.நளீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் எம்.எல்.ரெபுபாசம் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டன. இதன்போது நளீம் என்பவர் போட்டியில் இருந்து விலகி கொண்டதனால், ரெபுபாசம் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தவிசாளர் தெரிவின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் 4உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2உறுப்பினர்களும் சுயேட்சைக்குழு சார்பிலான உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர். இதன்போது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உறுப்பினர் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment