பிரதான செய்திகள்

தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சகலரும் முன்வர வேண்டும்: தவிசாளர் அமானுல்லா

மக்களின் ஆணையைப் பெற்று உள்ளூராட்சி சபையில் அங்கம் வகிக்கின்ற நாம் தேர்தல் மேடைகளில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2வது அமர்வு செவ்வாய்க்கிழமை (10) தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமை உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல கிராமங்களைக் கொண்டடைந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்கள் மிக நீண்டகாலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களின் இன நல்லுறவுக்காகவும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் புதிதாக அமையப் பெற்றுள்ள இச்சபை கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். இப்பிரதேச சபை, நாட்டின் அனைத்து மக்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் முன்மாதரியாகத் திகழ வேண்டும்.

பிரதேச மட்டத்தில் மக்கள் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவ்வாறான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி, உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்கு அரசியல் பிரதிநிதிகளுக்கு, அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும். எமக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் போதே மக்கள் எம்மை மதித்து நடப்பதுடன், எதிர்காலத்திலும் நம்பிக்கை வைத்து நமக்கான ஆணையை வழங்குவார்கள்.

இந்தப் பிரதேச சபையை மக்கள் சபையாகவே நான் கருதுகின்றேன். மக்களின் நலனுக்காகவும், பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் எந்த நேரமும், எச்சந்தர்ப்பத்திலும் இச்சபை இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment