குறித்த செயலமா்வில் கல்ஏலிய பெண்கள் அரபிக் கல்லுாாியில் சாதாரண தரம் மற்றும் உயா்தரம் பயிலும் 350 மாணவிகள் கலந்து கொண்டனா்.
21ஆம் நுாற்றாண்டில் ஊடகம் எனுமத் தலைப்பில் நடைபெற்ற இந்த செயலமா்வில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் .இடம்பெற்றது. இதில் கல்லுாாியின் முகாமைத்துவ சபையின் தலைவா் எஸ்.ஏ.சிஎம் சுபைர், மற்றும் கல்லுாாி அதிபா் எஸ். பரீதா, சட்டத்தரணி சல்மான் றியாழ் ஆகியோறும் கலந்து கொண்டனா்
ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளா் சாதிக் சிகான், மற்றும் செயற்குழு உறுப்பினர்களான பிறவ்ஸ் மொஹமட், சிரேஸ்ட அறிவிப்பாளா் புர்ஹான் பீபி இப்திக்காா் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் பணிப்பாளா் , அஹமத் முனவா் , நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சின் ஊடக ஆலோசகா் ஹில்மி முஹம்மத், தினகரன் பத்திரிகையின் ஆலோசகா் எம்.ஏ எம். நிலாம் அளுத்கம கல்விக் கல்லுாாியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி ஆசிரியா் முஹம்மட் பைருஸ் மௌலவி எஸ்.எல் நவ்பா் ஆகியோர் பல்வேறு தலைப்புக்களில் ஊடக செயலமா்வுகளை நடாத்தினர்.



0 comments:
Post a Comment