இரு குழுக்களுக்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
இதனையடுத்து, தெல்தெனிய நகரிலுள்ள கடைகளில் சில கடைகள் நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அத்துடன் வாகனங்கள் சிலவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment