பிரதான செய்திகள்

இலங்கையில் facebook பாவனை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் முகப்புத்தக பாவனையால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இவ் ஆண்டின் ஆரம்ப மூன்று மாதங்களில் இலங்கையில் முகப்புத்தக பாவனையாளர்களின் கணக்குகள் தொடர்பாக மட்டும் 70 சதவீதமான முறைப்பாடுகள் கிடைக்பெற்றுள்ளதாக தகவல் பாதுகாப்பு ஆய்வாளர் தீன தயாலன் தெரிவித்தார்.

இலங்கையில் முகப்புத்தக பயன்பாட்டின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் முகப்புத்தக பாவனை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

முகப்புத்தகம் தகவல் பரிமாற்ற ஊடகமாக காணப்பட்டாலும் சமுகத்தில் பிரச்சினைக்குறிய ஒரு தகவல் பாரிமாற்ற மூலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

2018 ஆம் ஆண்டின் ஆரம்ப மூன்று மாதங்களில் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக கிடைக்கபெற்ற முறைப்பாடுகளின் படி இது வரையில் 720 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் 70 சதவீதமான முறைப்பாடுகள் முகப்புத்தகத்துடன் தொடர்பு பட்டதாகும் என அவர் குறிப்பிட்டார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment