பத்து வருடங்களாக சிறையில் வாடிவரும் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
கொழும்பிற்கு வந்துள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியை நேரில் சந்தித்தனர். இதன்போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே-யை சந்தித்து, தாயை இழந்து தவிக்கும் தமக்கு தந்தையுடனேனும் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
குழந்தைகளின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர், இது குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதாகவும், ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்கமைய ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்ததுடன், நம்பிக்கையான வாக்குறுதியும் ஜனாதிபதியிடமிருந்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment