பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய உடல் ஆரோக்கிய, விளையாட்டு நிகழ்வு

- றிசாத் ஏ காதர் - 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் எண்ணக்கருவான உடல் ஆரோக்கிய, விளையாட்டு வாரம் 2018 என்கிற தேசிய வேலைத்திட்டமொன்றினை விளையாட்டு அமைச்சு நாடுபூராகவுமுள்ள பிரதேச செயலங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதனடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் குறித்த உடல் ஆரோக்கிய, விளையாட்டு வாரம் இன்று (24) சிறப்புற அனுஷ்டிகப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்பபுடன் குறித்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

உடல் ஆரோக்கிய, விளையாட்டு நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நடைபவணியாக சென்று தேசிய கல்விக்கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது. பின்னர் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உடற்பயிற்சி நிகழ்விலும் பங்கேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ. ஆதிசயராஜ், தள ஆயர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எம்.அஸ்லம் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், விளையாட்டு உத்தியோகத்தர் உட்பட அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல். தாஜூதீன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வின் பின்னர் திணைக்களங்களுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி, கயிறிழுத்தல் நிகழ்வு என்பனவும் இடம்பெற்றமை நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment