உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபைக்காக தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மேற்படி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு (23) அம்பாறை நகர சபை வாடிவீட்டில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபைக்காக தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இதன்போது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், எம்.வை. சலீம், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.வை.எம்.ஹனிபா சாய்ந்தமருது சுயற்சைக்குழுத் தலைவர் எம்.எச்.எம்.நௌபர், மாளிகைக்காடு சுயற்சைக்குழுத் தலைவர் சாஹீர் ஹுசைன் ஆகியோரோடு ஏனைய அதிதிகளும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment