பிரதான செய்திகள்

தேசியப் பட்டியல் ஊடாக வந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கின்றனர்

தேசிய பட்டியலின் ஊடாக வந்த ஓரிருவர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவு பாதைக்கு இட்டு செல்வதாக கட்சியின் உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினை உடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மேலும் மாரப்பன குழுவின் ஊடாக மக்கள் ஆணையை பெற்ற என் மீது ஆணை இல்லாதவர்கள் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொதர, கிம்புலாகலவில் விளையாட்டு கழகமொன்றுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்...

தேசிய பட்டியலின் ஊடாக வந்த ஓரிருவர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றனர். இவ்வாறான ஒரிருவரினால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பின்நகர்த்த முடியாத அளவிற்கு பாதிப்புக்கு உரியதாக உள்ளது.

எனவே நாம் ஐக்கிய தேசியக் கட்சியை பற்றி சிந்திக்க வேண்டும். தற்போது கட்சியை மறுசீரமைக்க நேரம் வந்துள்ளது. ஆகவே உடனடியாக கட்சியை மறுசீரமைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியை மாத்திரமின்றி ஏனைய கட்சிகளையும் மறுசீரமைக்க வேண்டும்.

ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியை பொறுப்பேற்ற போதும் அதில் தோல்வி அடைந்துள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினை உடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மேலும் மாரப்பன குழுவின் ஊடாக மக்கள் ஆணையை பெற்ற என் மீது ஆணை இல்லாதவர்கள் தீர்மானம் எடுக்கின்றனர்.

இந்நிலையில் நான் நிதி அமைச்சராக பதவி வகித்த போது மாணவர்களுக்கான காப்புறுதிகள் மற்றும் டெப் கணிணி வழங்குவதற்கான திட்டங்களை நானே ஆரம்பித்தேன். எனினும் இதற்கு சொந்தம் கொண்டாடுவதற்கு பலர் முனைகின்றனர் என்றார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment