பிபிதெமு பொலன்னறுவை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மெதிரிகிரிய வைத்தியசாலையில் நிலவிய பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, தாதியர் விடுதி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மகப்பேற்று மருத்துவ நிலையம், சிறுநீரக நோய் நிவாரணப் பிரிவு ஆகியன இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.
90 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடமத்திய மாகாண ஆளுநர் டி.பி.திசாநாயக்க, முன்னாள் மாகாண சபை அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த, மாகாண சுகாதார செயலாளர் சமன் பந்துலசேன, மாகாண சுகாதார பணிப்பாளர் பாலித்த பண்டார, மெதிரிகிரிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சுனில் செனரத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment