தமக்கு பிணை வழங்குமாறு கோரியே இருவரும் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுவில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் தமக்கு எதிராக இரகசிய பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாம் எவ்வித தவறையும் இழைக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தமக்கு பிணை வழங்க மறுக்கப்பட்ட விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுமக்கல் வாங்கல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் எலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment