சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவு சங்க இயக்குநர் சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் சனிக்கிழமை (3) இடம்பெற்றது.
குறித்த தேர்தலில் ஹசன் அலி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அணியினர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியினரும் போட்டியிட்டனர்.
9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு 7உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 2 உறுப்பினர்களும் கிடைத்துள்ளன.
இந்நிலையில், இயக்குநர் சபையின் புதிய தலைவராக எஸ்.பி.சியாத் என்பவரும், உப தலைவராக எம்.எம்.எம்.சமூன்(வசீர்) என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் மேலும் 7பேர் இயக்குநர் சபையின் பணிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 2இளைஞர்களும், 2பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்:
எம்.ரீ.எம்.மர்சூக்
எஸ்.நிஸா
எச்.ஜே.பைசல்
எம்.ஏ.தாஹிரா பேகம்
எஸ்.ரீ.ஐனுல் பர்ஹானா
சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று அதன் அதிகாரத்தினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரிடம் நம்பிக்கையோடு கையளித்த ஆதரவாலர்களுக்கும், இயக்குநர் சபை உறுப்பினர்களாக தெரிவாகியவர்களுக்கும், சங்கத்தின் அதன் தலைவர், உப தலைவர் ஆகியோருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் ஹசன் அலி நன்றி தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment