பிரதான செய்திகள்

தமது ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை

தமது ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவும் தமது பாவங்களை போக்குவதற்காகவும் கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முனைகின்றனர்.

இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை தோற்கடித்து விட்டு பாரிய வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் சுதந்திரக் கட்சியினரும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கவே முனைவர். என்றாலும் அதற்கு மீறி சுதந்திரக் கட்சியினர் வாக்களித்தால் வாக்களிப்பவர்கள் யார் என்பதனை பார்த்து அதன்பின்னர் தீர்மானம் எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment