அட்டாளைச்சேனை black night விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று (17) கழகத்தின் தலைவர் ஏ.எம்.அக்பர் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கோணாவத்தை அமைப்பாளர் எச்எம்.இல்முதீன் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
black night விளையாட்டுக் கழகத்திற்கு புதிய சீருடையினை பெற்றுக்கொடுப்பதற்கு உதவிய அமைப்பாளர் இல்முதீன் மற்றும் எச்.உவைஸ் ஆகியோருக்கு கழகத்தின் தலைவர் அக்பர் இந்நிகழ்வின் போது நன்றி தெரிவித்தார்.
மேலும் கழகத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், black night விளையாட்டுக் கழகத்தில் புதிதாக இணைந்துகொண்ட வீரர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.



0 comments:
Post a Comment