பிரதான செய்திகள்

சர்வதேச அல்- குர்ஆன் போட்டியில் ஓட்டமாவடி இஸ்ஸத் ஐந்தாம் இடம்

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினை பிறப்பிடமாக கொண்ட அல்-ஹாபிழ் எம்.ஐ.மொஹம்மட் இஸ்ஸத் அன்மையில் எகிப்து நாட்டில் இடம் பெற்ற சர்வதேச அல்- குர்ஆன் போட்டியில் ஐந்தம் இடத்தினை பெற்று தனது பிரதேசத்திற்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஐம்பந்தைந்து நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு கொண்ட குறித்த சர்வதேச குர்ஆன் போட்டியில் இஸ்ஸத் ஐந்தாம் இடத்தினை பெற்றிருப்பதானது அவருக்கு குர்ஆன் மற்றும் மார்க்க கல்வியினை வழங்கிய வாழைச்செனை அந் நஹ்ஜத்துல் இஸ்லாமிய அரபு கல்லூரிக்கும் மேலும் பெருமை சேர்க்க கூடிய விடயமாக உள்ளது.

அத்தோடு தமது பாடசாலை மற்றும் அரபு கல்லூரி வாழ்க்கையில் சகல விதமான இஸ்லாமிய மார்க்க, அரபு மொழியிலான போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள அல்- ஹாபிழ் மெளலவி இஸ்ஸத் வாழைச்சேனை அந்- நஹ்ஜத்துல் இஸ்லாமிய அரபு கல்லூரியில் 2015ஆம் ஆண்டு அல்-ஆலிம் மெளலவி பட்டத்தோடு வெளியேறியதுடன் 2018ஆம் ஆண்டு நாவலபிட்டிய ஹம்சிமியா அரபு கலாசாலையில் அல்-ஹாபிழ் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment