பிரதான செய்திகள்

பாலமுனை பிரதேசத்தில் 3மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை

(றியாஸ் ஆதம்)

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பாலமுனை மின்ஹஜ் மகா வித்தியாலத்தில் 2மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அதிகமான மாணவர்கள் இம்முறை சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பாடசாலைக்கும், பாலமுனை பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுல்லா தெரிவித்துள்ளார்.

பாலமுனை மின்ஹஜ் மகா வித்தியாலயம் சார்பாக கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 50மாணவர்கள் தோற்றினர். இதில் 46மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியிலும் மாணவி ஒருவர் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அதிகமான மாணவர்கள் இம்முறை சிறந்த பெறுபேற்றினைப் பெற்று உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் 40மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி 35மாணவிகள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை மின்ஹஜ் மகா வித்தியாலய மாணவா்களான சலாஹூதீன் முஹம்மது சப்ரி இல்ஹாம், அப்துல் லத்தீப் முஹம்மது சுதைல் மற்றும் அல்-ஹிதாயா மகளிர் கல்லூரி மாணவியான முஹம்மது ஜெமீல் அஸ்கா ஆகியோரே 9ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் பாலமுனை பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள், பொது அமைக்கள், பிரதேச மக்கள் என பலரும் பாராட்டுத் தெரிவிப்பதுடன், இச்சாதனைக்கு இரவு பகலாக உழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் பாலமுனை பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment