களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு - குருமண்வெளி கிராமத்தில் குடும்பப் பெண்ணொருவர் அவரது வீட்டின் உறங்கும் அறையிலிருந்து இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பிள்ளையின் தாயான குருமண்வெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 42 வயதான முத்துலிங்கம் கோசலை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற் கூறாய்வுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினர்.
குறித்த பெண் சில காலமாக கடன்வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நுண்கடன்களை மீளச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்குள்ளாகியிருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment