பிரதான செய்திகள்

களத்துக்குச் சென்று திகன முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்: ரவூப் ஹக்கீம்

கண்டி, திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (05) நேரில் சென்று பார்வையிட்டார்.

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேரில் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம்கள் எவ்வித அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறும் வேண்டிக்கொண்டார்.

பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்குள்ள உயரதிகாரிகளுடன் பேசி முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாத வண்ணம் சந்திகளில் பொலிஸாரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment