இம்மாதம் 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர் இலங்கையில் தங்கி இருப்பார் என ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் ஊடக பேச்சாளர் ஸ்டெபான் துஜாரிக் இதனை அறிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளையும், மதத்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
அத்துடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெஃப்ரி ஃபெல்ட்மன் கண்டிக்கு சென்று பார்வையிட உள்ளதுடன் அங்குள்ள மத தலைவர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக ஸ்டெபான் துஜாரிக் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment