கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் 03ஆம் இலக்க சுயேச்சைக்குழுவின் 05 ஆம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனை எம்.எஸ்.எம்.ஹாரிஸ் (நவாஸ்) இன்று புதன்கிழமை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி முன்னிலையில் மாநகர சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மாநகர சபை செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் ஆகியோரும் புதிய உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஹாரிஸின் உறவினர்களும் முக்கியஸ்தர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.

0 comments:
Post a Comment