பிரதான செய்திகள்

2000 இராணுவத்தினரை கண்டிக்கு அனுப்புமாறு ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் வேண்டுகோள்

கண்டி மாவட்டத்தில் இன்றிரவும் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் திகன பிரதேசத்தில் மீண்டும் பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அங்கு களத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாதுகாப்பு தரப்பினருடன் பேசி பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, கலகக்காரர்களை விரட்டியுள்ளனர். இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாதுகாப்பு தரப்பினருடன் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.

இங்கு 200 படையினரே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் வருகின்ற கலகக்காரர்களை எம்மால் கட்டுப்படுத்துவதற்கு எம்மிடம் போதியளவு படையினர் இல்லையென அங்கிருந்த பொலிஸார் கூறியுள்ளனர். உடனே பிரதமரை தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், வெளி மாவட்டங்களிலுள்ள 2000 இராணுவத்தினரை உடனடியாக கண்டி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதவிர, அயலிலுள்ள மடவளை பிரதேசத்திலுள்ள தற்போது பதற்றநிலை தோன்றியுள்ளது. அங்கு ஸ்தலத்துக்குச் சென்ற அமைச்சர் அச்சம் நிலவும் பிரதேசங்களில் பொலிஸாரை நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இந்‌நிலையில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, திகன பிரதேசத்தில் இனவாத தாக்குதலினால் கயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, மரணமடைந்த அப்துல் பாஷிதின் சகோதரர் மற்றும் பாஸில் ஆகியோரை  அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரில்சென்று பார்வையிட்டார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment