இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 12வது பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான சகல ஏற்பாடுகளையும் பலகலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுவருகின்றது.
510 வெளிவாரி (External Degree) மற்றும் 19 முகாமைத்துவ முதுமாணி பட்டப்படிப்பு (MBA) துறைகளில் தமது பட்டப்படிப்பு நெறிகளைபூர்த்தி செய்த பட்டாதாரி மாணவர்கள் உட்பட மொத்தம் 950 பேர் இவ்வருடம் பட்டங்களைப்பெறவுள்ளனர்.
இப்பட்டமளிப்பு விழாவானது மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. பட்டமளிப்புக்கான சீருடையையும், பட்டமளிப்பு மாலையையும் அனுமதிச்சீட்டினையும் மார்ச் 17ஆம் திகதி தென்கிழக்குப்பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை பெற்றுக்கொள்ளலாமென பதிவாளர் அறிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment