இச்சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமலெப்பை மற்றும் தேசிய காங்கிரஸின் பொருளாளர். ஜே.எம். வஸீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின்போது அம்பாரையில் ஏற்பட்ட இனக்கலவரம் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதென்பதை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அங்கு சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் உடமைகள் பற்றிய வீடியோ காணொளியினையும் ஜனாதிபதியிடம் காண்பித்தார்.
இந்த இனக்கலவரத்தின் போது முற்று முழுதாக சேதமடைந்த அம்பாரை பள்ளிவாசலை அரச செலவில் மீள்நிர்மாணம் செய்ய வேண்டுமெனவும் சேதங்களுக்குள்ளான முஸ்லிம் வர்த்தகர்களின் உடமைகள், சொத்துக்களுக்கு ஜனாதிபதியின் விஷேட கவனத்தினைச் செலுத்தி அதற்கான நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் அதாஉல்லா வலியுறுத்திக் கூறினார்.
அத்தோடு இக்கலவரத்திற்கு காரணமானவர்களை பாரபட்சமின்றி கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
இதற்கமைவாக, இக்கலவரத்தினை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபரை வேண்டிக்கொண்ட ஜனாதிபதி, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் சேதங்களுக்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.

0 comments:
Post a Comment