பிரதான செய்திகள்

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு பிரதான புகையிரத நிலைய அதிபராக ஆறுமுகம் வசந்தகுமார் நியமனம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பைச் சேர்ந்த ஆறுமுகம் வசந்தகுமார் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலுள்ள பிரதான புகையிரத நிலைய அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை புகையிரத திணைக்களத்தில் 35வருடங்களாக புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றிவந்த நிலையிலே இவர் இவ் உயர்பதவியுயர்வை பெற்றுள்ளார்.

சிறந்த சமூக சேவையாளரும், அகில இலங்கை சமாதான நீதவானுமான இவர் அமரர்களான ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், ஒய்வு பெற்ற மாவட்ட செயலாளரின் பிரத்தியேக உதவியாளர் திரு சாம்பசிவம் ஜேபி, அமரர் கனகம்மா ஆகியோரின் மருமகனும் திருமதி .சிவரஞ்சினியின் கணவரும்,கொக்கட்டிச்சோலை பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் டுஜித்திரா லிங்கேஸ்வரன் மற்றும் சீலோம் தனியார் மருத்துவமனை  தாதிய உத்தியோகத்தர் பவித்திரன் ஆகியோரின் தந்தையும் ,மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பட்டைய பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரனின் மாமனாரும், செல்வி எல்.ஹரிகா ஹர்ஷியின்  அம்மப்பாவும் ஆவார்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதான புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றி நேற்று 27ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான புகையிரத நிலைய அதிபர் எம்.பீ.ஏ.கபூரின் பதவி வெற்றிடத்திற்கே புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக ஆறுமுகம் வசந்தகுமார் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment